குருணாகல் பிரதேசத்தில் குளியாப்பிட்டிய - ஹெட்டிப்பொல வீதியில் லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (24) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
முட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் காரானது முன்னோக்கிச் சென்று அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறியில் கொண்டு செல்லப்பட்ட பல முட்டைகள் உடைந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Srilanka Tamil News