யாழில் - மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓடக் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் சேட்டை சாரதி

பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓடக் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் சேட்டை புரிந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.


44 வயதான முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த மாணவி ஒருவரை அவரது கல்வி நடவடிக்கைக்காக ஏற்றி இறக்கும் சேவைக்காக முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மாணவியின் பெற்றோர் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.


இந்நிலையில் நேற்றைய தினம் தனது முச்சக்கர வண்டி திடீரென பழுதடைந்து விட்டதாகக் கூறி குறித்த சாரதி, மாணவியை தனது  மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

tamil lk news


இதன்போது  மாணவியிடம் மோட்டார் சைக்கிள் ஓடக் கற்றுத்  தருவதாகக்  கூறி, மாணவியை முன் இருக்கையில் அமர்த்தி, மாணவியிடம் குறித்த நபர் பாலியல் ரீதியான சேட்டை புரிந்துள்ளார்.


வீடு திரும்பிய மாணவி இது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.



இதனையடுத்து முச்சக்கர வண்டி சாரதியைக் கைது செய்த பொலிஸார்,



அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்