சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை அணிந்து வந்த இலங்கைப் (Srilanka) பயணி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 995 கிராம் நிறையுடைய 24 கரட் தங்க நகைகளை அணிந்திருந்த நிலையில் குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Jaffna Tamil News
Tags:
jaffna