யானையைக் கண்டு பயந்து முச்சக்கரவண்டியை திருப்ப முயன்ற சாரதி வேனில் மோதி பலி!

tamil lk news


 புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் முச்சக்கரவண்டியும் வேனும் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.


அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதி, வீதியைக் கடந்த காட்டு யானையைக் கண்டு, பயந்து, தனது வாகனத்தை திருப்ப முற்பட்டபோது, முச்சக்கரவண்டியானது புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது மோதியுள்ளது. 


இந்த  விபத்தில் உயிரிழந்தவர் இராஜாங்கனை சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.  


விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  




இவ்வீதியினூடாக தினமும் காட்டு யானைகள் நடமாடுவதாலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தப்படுவதாலும் இவ்விபத்து  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


கடந்த காலங்களில் இந்த வீதியில் இதுபோன்ற பல விபத்துக்கள் இடம்பெற்று, பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்