Vavuniya Tamil News
வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை இடம்பெற்றது.
சீனத்தூரகத்தின் பிரதிப் பிரதானி சூ.யன்வெய் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 350 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
வடமாகாணத்தில் 2470 குடும்பங்களுக்கு 6490 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன்
வவுனியா மாவட்டத்தில் 350 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டன.