நாடு முழுவதும் திடீர் மின்தடைக்கான காரணம் வௌியானது

Srilanka News Tamil

நாடு முழுவதும் திடீர் மின்தடைக்கான காரணம் வௌியானது-The cause of the sudden power outage across the country has been revealed.


  பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால், தேசிய மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுடன் இணைந்து நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.



மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் செயற்பட்டு வருவதாகவும், திடீரென ஏற்பட்ட மின்வெட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மின்சக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்