உயிரிழந்த பின்பும் பலரின் உயிரை காப்பாற்றிய சிறுமி

tamillk.com


கொழும்பு புறநகர் பகுதியான பாதுக்க பிரதேசத்தில் பலரின் உயிரைக் காப்பாற்றி விட்டு உயிர் இழந்த சிறுமி ஒருவர் பற்றிய செய்திகள் வெளியாகின.

தரம் 10 கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியான நிசலி லொசதி கிரிவெந்தல என்ற பாடசாலை மாணவி கடந்த 3 ஆம் திகதி மேலதிய வகுப்புக்காக சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது,பாதுக்க வீதியில் வத்தரக புகையிறத நிலையத்திற்கு அருகாமையில் முச்சக்கரவண்டியில் மோதி படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்த மகளின் இதயம், சிறுநீரகம், நுரையீரல், கண்கள் உள்ளிட்ட எட்டு உடல் உறுப்புக்கள் பலருக்கு தானமாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்