இலங்கை போக்குவரத்து சபை புதிதாக அறிமுகம் செய்துள்ள நீண்ட தூரா பேருந்துகளுக்கான நேர அட்டவணையை எளிதாக கண்டறியும் வகையில் app ஒன்று இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தன ‘sltb.eseat.lk’ என்ற app அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ள app ஆனது இலங்கையின் மிகப்பெரிய இணைய முன்பதிவு தளமாகும். இதன் மூலம் மில்லியன் கணக்கான இலங்கையர்களின் பயணத்தை இலகுவாக்கும் முறையில் ஒன்லைன் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும்.
அத்துடன் பேருந்துகளின் வருகை மற்றும் புறப்படும் நேரம் ஆகியவற்றை அறிய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
Tags:
srilanka